பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம்
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் குறிப்பு ஆலோசனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மத்திய அரசிற்கு மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி தொடர்பான நிலுவைத் தொகைகளை திருப்பித் தராமல் மத்திய அரசு இழுத்து அடித்து வருகிறது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட நிலையிலும் எந்த நிதியும் ஒதுக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் வரும் பிரதமருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தேசிய மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரொனால்டோ முன்னிலையில் கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஹெலிகாப்டரில் இறங்கும் பகுதிக்கு அருகே உள்ள சமாதானபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரும் மீனவர்களும் கலந்து கொள்கின்றனர்.