in

பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு


Watch – YouTube Click

பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு

 

பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்பொழுது:

பிரதமர் மோடி ஒடிசாவிலே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தமிழர்களை திருடர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது மட்டும் தமிழர்கள், தமிழ், திருவள்ளுவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், என்று பேசுகிறார். ஆனால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது. எனவே தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக கருப்பு கொடியேந்தி கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் வேங்கை ராஜா, முகமது அலியார், அப்பாஸ் மந்திரி, மொழி போர்த்தியாகி ராமு ராமசாமி, அப்துல் ரகுமான், கார்த்திக், பாரதி, ஜோதி ராமலிங்கம், உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை