ஜிப்மரில் ரத்த தானம் செய்து நூதன முறையில் ஏழாவது நாளாக தொடரும் போராட்டம்
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை கண்டித்து புதுச்சேரி ஜிப்மரில் ஏழாவது நாளாக தொடரும் போராட்டத்தில் ரத்த தானம் செய்து நூதன முறையில் தங்களது கோரிக்கைகளை மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள்…
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஜிப்பர் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஏழாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் மருத்துவர் படுகொலைக்கு நியாயம் வழங்க வேண்டும், மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் மனித சங்கிலி, அணிவகுப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் “நீதிக்காக ரத்தம் சிந்துவோம்” என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி ரத்த தானம் செய்து தங்களது கோரிக்கையை வலுப்படுத்தினார்கள்.
பெண் மருத்துவர் படுகொலையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது மருத்துவ பாதுகாப்பு சட்டம் கொண்டுவரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்…