குத்தாலம் உக்தவேதிசுவரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா
ஆடி கிருத்திகை முன்னிட்டு குத்தாலம் உக்தவேதிசுவரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதுமான அரும்பண்ண முலையம்மை சமேத உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சண்முகநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஆலய தீர்த்தமான சுந்தர தீர்த்தத்திற்கு சண்முகநாத ஸ்வாமி வீதி உலாவாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு எழுந்தருளினார்.
மங்கள வாத்தியங்கள் முழங்க தெப்பம் ஐந்து முறை தீர்த்த குளத்தை வலம் வந்தது. தொடர்ந்து சண்முகநாதருக்கு மகா தீபாரதனை செய்யப்பட்டது.
விழாவில் தர்மபுரம் ஆதீன 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றே சுவாமி தரிசனம் செய்தனர்.