in

மயிலாடுதுறையின் அடையாளச் சின்னமான பாரம்பரிய மணிக்கண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறையின் அடையாளச் சின்னமான பாரம்பரிய மணிக்கண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

 

மயிலாடுதுறையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளக்கும் பாரம்பரிய மணிக்கண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல்துறையினர் தீவிர சோதனை.

மயிலாடுதுறை கடைவீதியில் நடு நாயகமாக இருக்கும் மணிக்கூண்டு 1943-ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்துவைக்கப்பட்டது.

உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது, போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றிபெற்றது.

இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக முதன்முறையாக துனிசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் நினைவுச்சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல்காதர் என்பவர் கட்டினார்.

மயிலாடுதுறையின் அடையாளங்களில் ஒன்றாக மணி கூண்டு விளங்குகின்றது. இந்நிலையில் மணிக்கூண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது வெடித்து சிதறும் என்றும் மர்ம தொலைபேசி ஒன்று காவல்துறைக்கு வந்தது இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மணிக்கூண்டில் சோதனை செய்தனர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காத நிலையில் இதுகுறித்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

விஜய் கட்சிக்கு TVK… ன்னு பெயர் வெச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா

கத்துகிட்ட மொத்த வித்தையை இறக்கிய டைரக்டர் 2898 AD ஹாலிவுட் படத்துக்கே நெத்தியடி