வடகரை அருகே அரங்கக்குடி புது தெருவில் 100 குடும்பத்தினர் தேர்தல் புறக்கணிப்பு வீட்டு வாசலில் கருப்புக் கொடி கட்டி வாக்களிக்க செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் வடகரை அருகே அரங்கக்குடி புது தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு குடியிருப்பு பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் கடந்த 15 தினங்களுக்கு முன்பு தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை அவர்கள் வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை இந்நிலையில் இன்று புதுத்தெருவில் உள்ள வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் 100 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 250 பேர் வாக்களிக்க செல்லவில்லை.