in

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் புறக்கணிப்பு

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் புறக்கணிப்பு

 

கரூர் தொகுதி வேட்பாளர் வெற்றி சான்றிதழ் வழங்கும் அறைக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் புறக்கணிப்பு – தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் வெற்றி சான்றிதழ் வழங்கும் அறை முதல் தளத்தில் இருப்பதால் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கீழ்தளத்தில் இருந்த நிலையில், செய்தி சேகரிப்பதற்காக சான்றிதழ் வழங்கும் அறைக்கு செல்வதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்த பிறகும் துணை ராணுவ படையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.

அடையாள அட்டை வைத்திருந்தும் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிகழ்வை கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் புறக்கணிப்பு செய்து வாக்கு என்னும் மையம் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த செயலை காவல்துறை அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

நாகை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்ற செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை