in

மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர் மாணவ மாணவிகள் புறக்கணித்தும் போராட்டம்

மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர் மாணவ மாணவிகள் புறக்கணித்தும் போராட்டம்

 

சென்னையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மாணவ மருத்துவர் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தும் புறநானழிகள் பிரிவை புறக்கணித்தும் தொடர் போராட்டம்

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் அருகாமையில் அனைத்து வகை மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே வேளையில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் இன்று ஒரு நாள் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

இது குறித்து பேசிய மருத்துவர்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் வாயிலில் புறக்காவல் நிலையம் அமைத்து ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து உறுதிமொழிகளையும் காகிதத்தில் வைத்துக் கொள்வதாகவும் நடைமுறையில் சாத்தியப்படுத்த தவறுவதாகவும் உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் மருத்துவர்களையும் பாதுகாப்பு கருதி நடைமுறைக்கு கொண்டு போக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

What do you think?

சூர்யாவின் வெறியாட்டம்…. கங்குவா movie Review and Theatre Response

சட்டக்கல்லுாரி தேர்வு முடிவுகளில் உச்சக்கட்ட குளறுபடி