in

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிரம்ம உபதேச உபநயன விழா

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிரம்ம உபதேச உபநயன விழா

 

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் பிரம்ம உபதேச உபநயன விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதில் வைபவத்தில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமாக வரும் ஆவணி மாதத்தை சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான, கொண்டாட்டத்திற்கான மாதம் என்றே சொல்லலாம்.வேதம் கற்பவர்களுக்கு மிக முக்கியமான நாளாக ஆவணி அவிட்டம் விளங்குகிறது.

ரிக், யஜூர் வேதங்கள் கற்பவர்கள் இந்த நாளில் கற்க துவங்குவார்கள். வேதங்கள் அவதரித்த நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுவதால் இந்த வேதங்களை போற்றி, பூஜித்து, வணங்கும் நாளாகவும் இது உள்ளது.இந்த வேதங்களை கற்றவர்கள் தங்களை புதுபித்துக் கொள்ளும் நாளாகவும் ஆவணி அவிட்டம் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வை ஒட்டி பிரம்ம உபதேசம் உபநயனம் செய்து கொண்டவர்கள் வேத மந்திரங்கள் ஜெபம் மந்திரங்கள் பாராயணம் செய்து அதனை புதிதாக மாற்றும் நிகழ்ச்சி ஆவணி அவிட்ட நாள் அன்று நடத்தப்படுவது வழக்கம் அதன்படி நெல்லை பாளையங்கோட்டை சுந்தர விநாயகர் திருக்கோவில் நடைபெற்ற ஆவணி அவிட்ட பிரம்ம உபதேச உபநயன பூணூல் மாற்ற நிகழ்வுக்காக சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து வேதம் மந்திரங்கள் ஜெப பாராயணங்கள் உச்சரிக்கப்பட்டு புதிய பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு தங்களது பழைய எண்ணங்களை தவிர்க்கும் விதமாக பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணிவித்துக் கொண்டனர் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் மகாதீபாரதனையும் நடைபெற்றது.

What do you think?

மக்கள் தலைவர் ஜி கே மூப்பனார் 93 வது பிறந்தநாள் விழா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

புதுச்சேரி 7வது நாளாக தொடர்கிறது ஜிப்மரில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம்