in

திண்டிவனம் ஸ்ரீ மூங்கில் அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா

திண்டிவனம் ஸ்ரீ மூங்கில் அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா

 

திண்டிவனம் ஸ்ரீ மூங்கில் அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர கிராம தேவதையான ஸ்ரீ சேர்த்துக்கால் செல்லியம்மன் என்கிற ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மூங்கிலம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திரிசூலம் பொறிக்கப்பட்ட கொடிபட்டதை தாங்கி துவஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து கொடி மாதத்திற்கு பஞ்சமுகத்தி ஆராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீ மூங்கில் அம்மன் மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கு காப்பு கட்டு வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ மூங்கில் அம்மன் கோயில் உட்பரகாரம் வலம் வந்து முத்து பிரபை வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

குன்றக்குடி அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்