திண்டிவனம் ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா
திண்டிவனம் நகர கிராம தேவதையான ஸ்ரீ சேத்துக்கால் செல்லியம்மன் என்கிற ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா இரண்டாம் நாளை முன்னிட்டு முத்து பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிராம தேவதையான ஸ்ரீ மூங்கில் அம்மன் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றம் தான் தொடங்கியது.
இன்று வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மூங்கில் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து முத்து பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து முத்துப் பல்லக்கில் காட்சி அளித்த மூங்கிலம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.