ஐரோப்பிய செய்திகள்
பிரிட்டனில் தோல் புற்று நோய் பாதிப்பு அதிகரிப்பு மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை
பிரிட்டனில் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சூரிய கதிர்களில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 20 ஆயிரத்து 800 பேர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் ஆட்சி அமைத்தால் வருமான வரியை உயர்த்த மாட்டோம் லேபர் கட்சி மூத்த தலைவர் உறுதி
பிரிட்டனில் லேபர் கட்சி ஆட்சியமைத்தால் வருமான வரியை உயர்த்த மாட்டோம் என லேபர் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் அந்தக் கட்சியின் நிழல் நிதி அமைச்சருமான ராக்கெல் தெரிவித்துள்ளார்.
இதேபோல தேசிய சுகாதார காப்பிட்டையும் அதிகரிக்க மாட்டோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
அதேசமயம் ஒரு சில திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஜூலை நான்காம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பெர்ன் மவுத் கடற்கரையில் பெண் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பெர்ன் மவுத் கடற்கரையில் பெண்ணை கொலை செய்வதாக சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கடற்கரையில் 32 வயது மதிக்கத்தக்க பெண் சமீபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் 38 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் கத்திக்குத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு காரணமான பதிவேல் வயது இளைஞரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடையதாக மற்றொரு இளைஞரின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அவரைக் குறித்து அறிந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் அணி கால்பந்து போட்டியில் வெற்றி விழாக்கோலம் பூண்ட மான்செஸ்டர்
மான்செஸ்டர் அணி கால்பந்து போட்டியில் டைட்டில் வெற்றி பெற்றதால் அந்த நகரமே விழா கோலம் பூண்டு காணப்படுகிறது.
நகரின் தேசிய கால்பந்து அருங்காட்சியகத்திலிருந்து டீன்ஸ் கேட் சிலை ஆயிரக்கணக்கானோர் மான்செஸ்டர் அணியின் சீருடை ஆன ஊதா கலரில் டி-ஷர்ட் அணிந்து மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது மான்செஸ்டர் அணியை புகழ்ந்து அவர்கள் முழக்கமிட்டது விண்ணை பிளந்தது.
வெல்ஃபாஸ்ட் கிழக்கு தொகுதியில் நவோமி லாங் போட்டி
வெல்ஃபாஸ்ட் கிழக்கு தொகுதியில் அலையன்ஸ் தலைவர் நவோமி லாங் போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த தொகுதியில் கடந்த 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இவர் எம்பி ஆக பதவி வகித்தவர்.
2019 பொதுத் தேர்தல் டி யு பி வேட்பாளர் ராபின்ஸனிடம் நவோமி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தோகா – அயர்லாந்து விமானம் திடீரென குலுங்கியதால் 12 பயணிகள் காயம்
தோகா – அயர்லாந்து விமானம் திடீரென குலுங்கியதால் 12 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து பிரிட்டனின் அயர்லாந்து டபிலின் நகருக்கு விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த விமானம் நடுவானில் திடீரென மேகக் கூட்டங்களில் மோதி குலுங்கியதால் அதிலிருந்து ஆறு பயணிகள், ஆறு சிப்பந்திகள் என 12 பேர் காயமடைந்தனர்.
ஒருவழியாக மதியம் ஒரு மணிக்குள் அந்த விமானம் டபிலின் நகருக்கு வந்தடைந்தது. காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்யா ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் பலியாகினார்கள் .
அந்த நகரின் சூப்பர் மார்க்கெட்டில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதை நேரில் பார்த்தவர்கள் இதே போல கொடூர காட்சியை தங்கள் வாழ்நாளில் இதற்கு முன்பாக பார்த்ததே இல்லை என்று சாட்சி அளித்துள்ளார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மது போதைக்கு அடிமையாகி இருந்தால் பிரபல எழுத்தாளராக ஆகி இருக்க மாட்டேன் அயர்லாந்து எழுத்தாளர் ஓப்பன் டாக்
நான் மட்டும் மது போதைக்கு அடிமையாக இருந்தால் பிரபல எழுத்தாளராக மாறி இருக்க மாட்டேன் என்று அயர்லாந்து சேர்ந்த பெண் எழுத்தாளர் மரியன் கீஸ் தெரிவித்துள்ளார்.
அவரது முதல் புத்தகம் கடந்த 1995 ஆம் ஆண்டில் வெளியானது. அந்தப் புத்தகம் பரவலாக விமர்சனத்தை பெற்ற நிலையில் இதுவரை 16 நாவல்களை அந்தப் பெண் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு காலத்தில் தனக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், தான் மட்டும் அதற்கு அடிமையாக இருந்தால் வாழ்நாளில் இதைப்போல பிரபலம் ஆகி இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.