in

London பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (29.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

London பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (29.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

Juan Cifuentes, 33, மற்றும் Farooq Abdulrazak, 37, ஆகியோர் ஜூலை மாதம் டென்மார்க் மற்றும் ஸ்வீடனுக்கு business ட்ரிப் சென்றவர்கள் வீடு திரும்ப வில்லை. இவர்களின் கார் மால்மோவில் கண்டுபிடிக்கப்பட்டபோது வாகனதிற்கு தீவைக்கப்பட்டு சுடபடிருந்தர்கள் போலீசாரின் தீவிர விசாரனைக்கு பிறகு ஜூலை 14 அன்று மால்மோவில் எரிந்த காரில் இறந்து கிடந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளை அழிக்க திட்டம் போட்டு உதவியதாக சந்தேக பட்டு என்று ஒரு நபரை வழக்கறிஞர் கைதி செய்ய உத்தரவு பிறபித்தார்

சர் கெய்ர் ஸ்டார்மர் இம்மானுவேல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பிரிட்டனின் பாராலிம்பிக்ஸ் அணியைச் சந்திக்கவும் பாரிஸ் சென்றுள்ளார் .Sir Keir Starmer இன்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஐரோப்பிய தலைவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தும் முயற்சிகளை தொடர்வார்.என்று எதிர்பார்க்க படுகிறது. பிரெக்சிட் பிரச்சனைகளுக்குப் பிறகு பல வருடங்களாக ஐரோப்பிய யூனியனுடனான தனது உறவை “மீட்டமைக்க” இங்கிலாந்து விரும்புகிறது என்பதைக் காட்டுவதற்காக இரண்டு நாட்கள் சந்திப்புகளை மேற்கொண்ட பிரதமர் பெர்லினிலிருந்து பாரிஸுக்குப் பயணம் செய்தார்.மேலும் புதன்கிழமை மாலை நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சர் கெய்ர் மற்றும் திரு மக்ரோன் ஆகியோர் பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்தனர்.

102 வயதை எட்டிய மானெட் பெய்லி, 7,000 அடி உயரத்தில் இருந்து குதித்து இங்கிலாந்தின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற சாதனையை படைத்தார். ஈஸ்ட் ஆங்லியன் ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு பணம் திரட்டுவதற்காக இந்த சாதனையை பயன் படுத்தி கொண்டார் .வேல்ஸ் இளவரசர் அவரது முயற்சிகளைப் பாராட்டினார். பெய்லி முன்பு தனது 100வது பிறந்தநாளில் 130 மைல் வேகத்தில் ஃபெராரியை ஓட்டி சாதனை படைத்தார்

பாரிஸில் 2024 கோடைகால பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான ஜோதி இங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கு சேனல் சுரங்கப்பாதை வழியாக ஜோதி பிராகசமாக கடந்து சென்றது. ஞாயிற்றுக்கிழமை ரிலேயில் ஃபோல்ஸ்டோனில் இருந்து சுரங்கப்பாதை வழியாக 24 பிரிட்டிஷ் விளையாட்டு வீரர்கள் 24 பிரெஞ்சு விளையாட்டு வீரர்களிடம் சுடரை ஒப்படைக்க பாதி வழியில் இணைந்தனர். பாராலிம்பிக் இயக்கத்தின் பிறப்பிடமான ஸ்டோக் மாண்டேவில்லில் ஏற்றப்பட்ட பின்னர், சுடர் பாரிஸுக்கு தனது பயணத்தை மேற்கொண்டது
பயணம் செய்தனர், கலேஸில் உள்ள பிரெஞ்சு கடற்கரைக்கு வந்தவுடன், சுடர் 12 பிரிவாக பிரிந்து பிரான்ஸ் முழுவதும் பயணிக்கும்.

What do you think?

நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.