பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (24.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News
2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலை, கல்வி அல்லது எந்த பயிற்சிலும் … இல்லாத 16-24 வயதுடையவர்களின் எண்ணிக்கை 872,000 ஐ எட்டியுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.” அதிகரித்து வரும் வேலையின்மை நிலைகளை சமாளிக்க அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், BBC செய்தியாளர் இரண்டு இளைஞர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் பற்றி பேசியது.”வேலைவாய்ப்பில் எனக்கு பல்வேறு தடைகள் உள்ளன – மனநலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது, எனக்கு நிறைய உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் உள்ளன – ஆனால் நான் எதையும் செய்யாமல் சும்மா இருக்றேன் என்று கூறினார்கள்
24 ஆகஸ்ட் 1991 அன்று உக்ரைனில் இருந்து சோவியத் யூனியன் அரசு வெளியேறியது. சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரேன் சுதந்திரம் அடைந்து 33 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், “இன்றும் எப்போதும்” இங்கிலாந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்று பிரிட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனில் தஞ்சம் புகுந்த உக்ரேனிய மக்களிடம் கூறி சுதந்திர தின வாழ்த்தையும் கூறினார்.
சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிரான இனவெறுப்பு பிரித்தானியாவில் அதிகரித்துவருவதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு பிரித்தானியாவை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட பொதுப் பிரமுகர்களால் இனவெறி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே தம்பதி கொலம்பியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். கொலம்பிய துணை ஜனாதிபதி Francia Marquez …சை இருவரும் சந்தித்த பிறகு அவருடன் பல இடங்களுக்கு சென்றனர். . San Basilio de Palenque என்ற கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விகாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நிதி வழங்குவதாக அறிவித்தனர், மேலும் the Colegio La Giralda என்ற பள்ளியில் உடற்பயிற்சி திட்டத்தை விரிவுபடுத்தினர்