in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (27.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (27.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

அடுத்த வாரம் பாராளுமன்றம் திரும்புவதற்கு முன்னதாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் சுருக்கமான உரையை ஆற்றுவார். “ஒரு தசாப்த கால சரிவை மாற்றியமைக்க” மற்றும் இங்கிலாந்து பொருளாதாரத்தின் “அஸ்திவாரங்களை சரிசெய்வதற்கு” பிரதம மந்திரி சபதம் செய்வார். . மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு குளிர்கால எரிபொருள் நிறுத்தியதற்காக அமைச்சர்கள் ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். ஸ்டார்மர் இரண்டு குழந்தைகளின் நன்மைக்கான வரம்பை முடிவுக்குக் கொண்டுவரவும், £1bn குடும்ப ஆதரவு நிதியை நீட்டிக்கவும் உள்ளார்,. தொழிலாளர் கட்சி நிர்வாகம் “பொருளாதார கருந்துகளை மட்டுமல்ல, சமூக கருத்துளையையும் சமாளிக்க வில்லை ஏன்றால் நிலைமை மோசமாகிவிடும்” பிரதமர் இன்று காலை 10 உரையை ஆரம்பிப்பார்”.

ரிஷி சுனக்கின் தனியார் ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்ய பட்டது, 40 மில்லியன் பவுண்டுவரிகளை மிச்சப்படுத்துவதற்காக சேவையை முடக்கியது. ஹெலிகாப்டர்களை அடிக்கடி பயன்படுத்தியதற்காக முன்னால் பிரதமராக சுனக் விமர்சனங்களை எதிர்கொண்டார்,இனி சவுத்தாம்ப்டனுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேல் ரயிலில் அவர் செல்ல வேண்டியிருக்கும் .புதிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, நாடு முழுவதும் உள்ள மூத்த அமைச்சர்களால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை முடக்கினார். அதற்குப் பதிலாக சர் கெய்ர் ஸ்டார்மர் போன்ற மூத்த அமைச்சர்கள், அரசுக்குச் சொந்தமான வாகனங்களை – RAF ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை – கண்டிப்பாக தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று defence secretary கூறியுள்ளார்.

பிரட்டனில் நடந்த கலவரங்களுக்கு காரணம் தவறான தகவல்களை பரவியதால் தான் என்று பிரிட்டன் அரசு கூறியதை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பலரை பிரிட்டன் அரசு கைது செய்த நிலையில் பொய்யான தகவலை பரப்பியவர் ஒரு இஸ்லாமியர் என்றும் அவர் சேனல் த்ரீ நவ் (channel 3 now )என்ற பாகிஸ்தான் ஊடகத்தில் தொடர்புடைய பர்கான் ஆசிப் ( Farhan Asif )என்பவர் என்று தெரியவந்த போது பாகிஸ்தான் போலீஸ் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. அவர்தான் இந்த தகவலை பரப்பினார் என்று சந்தேகம் படும்படியான எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் அவரை விடுதலை செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.

லண்டனில் Dagenham என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் 100 குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்ட தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பே மக்களை பாதுகாப்பாக தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றினர். நான்கு பேர் காயமடைந்த நிலையில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன இதுவரை அறியப்படவில்லை

What do you think?

மயிலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் வழுக்கு மரம் ஏறுதல்