பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (30.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News
தெற்கு வேல்ஸில் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்ததை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்வான்சீயின் ஜென்ட்ரோஸ் பகுதியில் உள்ள வீட்டில் ஒரு குழந்தை இறந்ததை கண்டு பிடித்த போலீசார் குழந்தையின் இறப்புக்கு அவருடன் தொடர்பில் இருந்த 41 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்க பட்டுள்ளார்,மேலும்,அந்தகுழந்தையும்,கைதான பெண்ணும் ஒன்றாக வாழ்ந்ததை உறுதி செய்த அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் போலீஸ்சார் சந்தேகிக்கவில்லை’ தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ் ட்ரஸ்கோட் “குழந்தை இறந்த சூழ்நிலையை துப்பறிய காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறினார்.
கீழ் முழுநேரத் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யவதற்கான உரிமையை கேட்கலாம். ஆனால் ஊழியர்கள் முழு ஊதியத்தைப் பெற ஒப்பந்த நேரத்திர்குள் தங்கள் வேலையை முடிக்க முழு நேரமும் உழைக்க வேண்டும், கன்சர்வேடிவ் வணிகச் செயலர் கெவின் ஹோலின்ரேக், இந்தத் திட்டங்களைப் “பயங்கரமாக” இருப்பதாகக் கூறினார். இருப்பினும், இது அவர்களது விருப்பம் ஊழியர்கள் அல்லது வணிகங்கள் மீது இந்த மாற்றத்தை திணிக்க மாட்டோம் என்று அமைச்சர்கள் வலியுறுத்துகின்றனர். வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்ய, ஊழியர்கள் சில சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டிய சுழலும் உருவாகும் என்று கூறினார்
காலியாக இருந்த ராணுவ நிலத்தை புதிய வீடுகலை கட்ட பயன்படுத்தபடும் என்று அரசு கூறியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு கூட கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தற்போது ஏற்படுத்த பட்டுள்ள இந்தத் திட்டதின் முலம் 10,000 புதிய வீடுகள் வரை வழங்க படும் . இந்த ஆண்டின் தொடக்கத்தில், MoD, கிட்டத்தட்ட 35,000 புதிய வீடுகள் கட்ட கூடிய “பிரவுன்ஃபீல்ட்” நிலத்தை அரசு அடையாளம் கண்டுள்ளது.