in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (01.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (01.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தனது சக வீரர்களுடன் இணைந்து ஜிம்னாஸ்டிக் வித்தையை காட்டினார். உடலை வில்லாக வளைத்து அந்தரத்தில் பரந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார் இவர் 171.296 என்ற புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் 27 வயதான சிமோன் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் கில் பங்கேற்று ஐந்தாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்

பண பற்றாக்குறை காரணமாக நிலவின் ஆய்வு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த நாசா. நிலவின் தென் துருவப் பகுதியில் நோபில் கிரேட்டர் {Nobile Crater } என்ற பகுதியில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் உள்ளதா என்றும் பனிக்கட்டிகள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன என்றும் ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஆராய முடிவு செய்தனர். இதற்காக 433. 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏறத்தாழ இந்திய மதிப்பில் 3 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டது வைபர் ரோவர் (VIPER rover’s ) என்ற திட்டத்தின் மூலம் ரோவர் ஒன்ரை 2001 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்டு .2023…ஆண்டு ரோவர் நிலவில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்டது ஆனால் ரோவர் மற்றும் லேண்டர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முழுமை அடையும் அதனால் இதற்கு கூடுதலாக பல மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதால் இந்த திட்டத்தை கைவிட நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்

நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் புதன்கிழமை பிற்பகுதியில் இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் போலீசாருடன் மோதினர், கடலோர நகரமான சவுத்போர்ட்டில் வன்முறை சம்பவங்கள் செவ்வாய்கிழமையன்று வெடித்ததற்கு காரணம் சவுத்போர்ட் நடன வகுப்பில் திங்கள்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு நபர் மூன்று இளம் பெண்களை கொன்று பல குழந்தைகளைக் காயப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான செய்திகளைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. மேலும் இச்சம்பவத்திற்கு காரணம் ஒரு முஸ்லிம் என்று ஊடகங்களில் கிடைத்த தவறான செய்தியை பார்த்து உள்ளூர் மசூதியை போரட்டகாரர்கள் தாக்கினர்.

நட்சத்திர செய்தி தொகுப்பாளர் மட்டும் அல்ல ஒரு காலத்தில் அதிக சம்பளம் பெறும் பத்திரிகையாளராக இருந்த முன்னாள் பிபிசி தொகுப்பாளர் ஹூ எட்வர்ட்ஸ், , குழந்தைகளை அநாகரீகமான படங்களை எடுத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டு. மூன்று பிரிவுகளின் கீழ் ஹூ எட்வர்ட்ஸ், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ரசிகர்களுக்கு ஹெல்மெட் கொடுத்து ஹெல்மெட்டனியாமல் அபராதத்தை கட்டிய பிரசாந்த்

12,700 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் தாக்கல்