பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (10.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News
மன்னர் சார்லசுக்கும் கமிலாவுக்கும் பிறந்த குழந்தைதான் நான் என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கி வருகிறார் .தன் தாய் மறையும் தருவாயில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தான் உனது பெற்றோர் என்று கூறியதாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் சைமன் என்பவர் தெரிவித்துள்ளார். சைமன் தான் சார்லஸ் ..இக்கு பிறந்தேன் என்ற உண்மையை மன்னர் குடும்பதாருடன் பரிசோதனையை மேற்கொண்டு அவர்களின் சதியை விரையில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்
செவிலியர்கள் ,சுகாதார அமைப்பு மற்றும் பணியாளர்கள் மீது UK கோவிட் -19 விசாரணையின் மூன்றாம் கட்டம் தொடங்கியுள்ளது, சுகாதார அமைப்பில் உள்ள பிரச்சனைகளை நிவர்த்தி செய், கோவிட் விசாரணை ஒரு புதிய கட்டத்தைத் நோக்கி நகர்ந்து உள்ளது . சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் நோயாளிகளுக்கு சரியான பராமரிப்பு வழங்க முடியவில்லை என்றும், பொருத்தமான பிபிஇ இல்லை என்றும் விவரித்தார்கள்.அப்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட £15 பில்லியன் கோவிட் ஒப்பந்தங்களில் அதிக அளவு ஊழல் நடந்துள்ளது என்பதையும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளிப்படுத்தியுள்ளது. மரித்த குடும்பங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட சாட்சிகளுக்கு அழைக்கப்பட உள்ளனர், சமர்ப்பித்த 23 சாட்சிகளில் இருவர் மட்டுமே பேசுமாறு கோரப்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கோவிட்-19 பிரித்தானியா நீதிக் குழு கூறியுள்ளது
புற்றுநோய் பாதித்த வேல்ஸ் இளவரசி கேத்தரின், கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், புற்றுநோயிலிருந்து “மீண்டும் ஒரு புதிய கட்டத்தில்” நுழைவதாகவும், கூறினார்.
“கோடை காலம் முடிவடையும் நிலையில், கீமோதெரபி சிகிச்சையை முடித்ததில் என்ன நிம்மதி என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் கடந்த ஒன்பது மாதங்கள் எங்கள் குடும்பம் சொல்ல முடியாத அளவிற்கு கடினமாக வாழ்க்கை இருந்தது . கேட் மற்றும் இளவரசி கேத்தரின் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டதாகவும் இருவரும் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படதை முதன் முறையாக வெளியிட்டனர்.
கீமோதெரபியை முடித்துக்கொண்டாலும், முழு குணமடைவதில் தான் கவனம் செலுத்துவதாகவும் கேட் கூறினார்.
2013 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர், புதிய அறிக்கையின்படி, “அதிர்ச்சியூட்டும் அளவுக்கு” வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இங்கிலாந்தில் குழந்தைகள் குட்டையாகவும், கொழுப்பாகவும், நோய்வாய்ப்பட்டு வருவதாக தெரிவித்திருகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் காணப்பட்ட சீரழிவுக்கு “மலிவான குப்பை உணவை ஆக்கிரோஷமாக ஊக்குவிப்பது” தான் காரணம் என்று தி ஃபுட் ஃபவுண்டேஷனும் குற்றம் சாட்டியுள்ளது