in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (12.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (12.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

நியூசிலாந்து ரக்பி விளையாட்டு வீராங்கனைகள் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை சந்தித்தனர்

நியூசிலாந்து ரக்பி விளையாட்டு வீராங்கனைகள் இந்த வார இறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை சந்தித்தனர். அணி வெற்றிபெற வேண்டும் என்று மன்னர் சார்லஸ் வாழ்த்தி கூறியதாவது, அவர் நியூசிலாந்திற்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் அவருக்கு புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் சமோவாவிற்கு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று கூறினார். அப்போது வீராங்கனைகளில் ஒருவரான ஆயிஷா என்னும் இளம்பெண், உங்களை கட்டி பிடிக்கலாமா என்று கேட்ட போது Why Not என்று கூறி மன்னர் அவரை அணைத்து கொண்டார். அதன் பின்னர் எல்லா பெண்களும் அவரை’ கட்டியனைதனர். தற்போது இந்த வீடியோ சமுக வலைதளத்தில் Viral ..ஆகி வருகிறது, ஏனென்றால், மன்னர் குடும்பம் யாரையும் கட்டி பிடிக்க கூடாது என்ற கோட்பாடை கடைபிடித்து வருபவர்கள்.

14 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தீ வைத்து எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது

14 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தீ வைத்து எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். லீசெஸ்டரின் பெடேல் டிரைவில் உள்ள ஒரு வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை போலீசார் அழைக்கப்பட்டனர், போலீஸ்.. விட்டிற்குள் சென்ற போது ஒருவர் உள்ளே உயிர் அற்ற நிலையில் கிடந்தார்.
உள்ளே இருந்த மற்றவர்கள் காப்பாற்ற பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். லீசெஸ்டர்ஷைர் தீயணைப்பு பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைகள் தொடர்ந்த நிலையில் சிறுமி பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்

iphone உபயோகிக்க அனுமதித்தில்லை

பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம், கேட் தங்கள் குழந்தைகளுக்கு iphone உபயோகிக்க அனுமதித்தில்லை. இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகிய இளம் ராயல்களுக்கு ஐபேட்கள் இல்லாத குழந்தைப் பருவத்தை உருவாக்குவதில் உறுதியாக இருகிறார்கள். அரச தம்பதிகள் தங்கள் குழந்தைகள் படைப்பாற்றலுடன் வளர ஓடியாடி வெளியில் விளையாட வேண்டும் . நானும் என் மனைவியும் சிறு வயதில் வெளியே சென்று விளையாடியது போல என் பிள்ளைகள் விளையாட வேண்டும் என வில்லியம் எதிர்பார்க்கிறார். ஆனால் குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்குமாம், அதனை கட்டுபடுத்துவது எப்படி என்று தேரியவில்லை என்று வில்லியம் வருத்த படுகிறார்.

கீர் ஸ்டார்மர் இரவு 9 மணிக்கு மேல் உணவு விளம்பரங்களுக்கு தடை

கீர் ஸ்டார்மர் இரவு 9 மணிக்கு மேல் உணவு விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளார். அக்டோபர் 2025 முதல் டிவி மற்றும் ஆன்லைனில் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான திட்டங்களை சுகாதார அமைச்சர் ஆண்ட்ரூ க்வின் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது “நாங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் இரவு 9 மணி..இக்கு வாட்டர்ஷெட்டை அறிமுகப்படுத்துவோம், மேலும் ஆன்லைனில் பணம் செலுத்தி விளம்பரம் செய்வதை மொத்தமாக தடைசெய்வோம்.” இந்த கட்டுப்பாடுகள் குழந்தைகளை ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்களின் விளம்பரத்திற்கு ஆளாவதிலிருந்து பாதுகாக்க உதவும், இந்த விளம்பரங்கள் சிறு வயதிலிருந்தே அவர்களின் உணவு விருப்பங்களை பாதிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது என்றார்.

What do you think?

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?

கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கம் சார்பில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி