in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (17.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (17.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

பந்தய வர்ணனையாளர் ஜான் ஹன்ட்டின் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கடுமையாக தாக்கி உயிர்வதை செய்ததாக கைல் கிளிஃபோர்ட் குற்றம் சாட்டப்பட்டார். 26 வயதான கிளிஃபோர்ட், கரோல் ஹன்ட் மற்றும் மகள்கள் லூயிஸ் மற்றும் ஹன்னா ஆகியோரை ஜூலை மாதம் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள புஷேயில் உள்ள அவர்களது வீட்டில் உயிர்வதை செய்த குற்றதிற்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

தொகுப்பாளர் Jamie Theakston தனக்கு புற்றுநோய் இருப்பதை ரசிகர்களிடம் பகிர்ந்தார். ஒரு மாதமாக அவரது குரலில் ஏற்பட்ட மாற்றத்தை ரசிகர்கள் கவனித்து கமெண்ட்ஸ் செய்ததால், பரிசோதனை செய்தவருக்கு ஸ்டேஜ் 1 புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஜேமி திக்ஸ்டன் வருத்ததுடன் கூறினார்.

டொமினோஸின் பிரபலமான டிப்களில் வேர்க்கடலையின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, பூண்டு, மூலிகை, தேன், கடுகு டிப்ஸ்களில் வேர்க்கடலை கலந்து இருந்ததால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.” கடந்த வாரம் டிப்கலை சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவருக்கு “வாய் அரிப்பு” ஏற்பட்டதாக X தளத்தில் பதிவிட்டார். இதனால் வரவிருக்கும் நாட்களில் டிப்ஸ் விநியோகம் நிறுத்தபடுவதாக டொமினோஸ் தெரிவித்துள்ளது.

லண்டன் மேயர் சாதிக் கானின் திட்டங்களின்படி ஆக்ஸ்போர்டு தெருவில் விரைவில் போக்குவரத்து தடை செய்யப்படலாம். கடைக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஆக்ஸ்போர்டு தெருவின் ஒரு சிறிய பகுதியை முழுவதுமாக பாதசாரிகளாக மாற்ற படலாம் “Oxford Street ஒரு காலத்தில் பிரிட்டனின் சில்லறை விற்பனைத் துறையில் கிரீடமாக இருந்தது, ஆனால் கடந்த ஆட்சியில் அது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று திரு கான் கூறினார்.

கெய்ர் ஸ்டார்மர் தனது மனைவிக்கு ஆடைகளை பரிசாக வழங்குவது தொடர்பான நாடாளுமன்ற விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டபடார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிசுகள் மற்றும் நன்கொடைகளை 28 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், ஜூலை மாதம் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு முன்னும் பின்னும் பிரதம மந்திரியின் மனைவி விக்டோரியாவின் தனிப்பட்ட ஷாப்பிங், மற்றும் இதர செலவுகளை சரியாக சமர்பிக்க வில்லை என்று Conservative கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

What do you think?

 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை துவக்கம்