பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (23.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News
OFGEM (Office of Gas and Electricity Markets) இன் விலை உச்சவரம்பு அதிகரிப்பு பலருக்கு “கவலை” யை அளிகிறது என்று எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட்,. தெரிவித்தார். அக்டோபரில் இருந்து எரிசக்தி விலை வரம்பு சராசரியாக ஆண்டுக்கு £1,717 ஆக உயரும் அபாயம் உள்ளது, இது பல குடும்பங்களுக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் செய்தியாக இருக்கும்” என்று மிலிபாண்ட் கூறினார்.
லீட்ஸில் தனது வேன் திருடப்படுவதைத் தடுக்க முயன்று பார்சல் டெலிவரி டிரைவரைக் போட்டு தள்ளிய குற்றதிற்காக ஒருவர் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். லீட்ஸின் ஆர்ம்லியைச் சேர்ந்த 32 வயதான மார்க் ரோஸ், 42 வயதான கிளாடியு-கரோல் …லை போட்டு தள்ளிய குற்றதிற்காக நீதிபதிகள் முன் ஆஜரானார். ஆகஸ்ட் 20 அன்று அவர்இந்த பாதகத்தை செய்தாக ஒப்பு கொண்டார்.
சிசிலி கடற்கரையில் படகு மூழ்கியதில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் 6 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் புலனாய்வாளர்கள் படகு மூழ்கியது தொடர்பான விசாரணை அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். படகில் இருந்த 22 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 15 பேர், திரு லிஞ்சின் மனைவி ஏஞ்சலா பேக்கரேஸ் …சும் மீட்கப்பட்டனர். சூப்பர் படகில் பணிபுரியும் கனேடிய-ஆன்டிகுவான் சமையல்காரரான ரெகால்டோ தாமஸின் உடல் திங்களன்று சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
லிலியன் புயல் இங்கிலாந்தின் சில பகுதிகளை தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளதின் காரணமாக பயண இடையூறு, மற்றும் மின்வெட்டுஆகியவை ஏற்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெள்ளிக்கிழமை ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டபோது லிலியன் புயல் காரணமாக 14 விமானங்களை ரத்து செய்துள்ளது .வடமேற்கு இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் காணபடுகிறது.