in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (26.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (26.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

ஞாயிற்றுக்கிழமை மேற்கு லண்டனில் நடந்த நாட்டிங் ஹில் கார்னிவல் நிகழ்ச்சியில் ஆயுததால் தாக்கப்பட்ட மூவரில் ஒருவர் மறைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். ஒரு பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார், 29 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் முதியர் ஒருவரும் கடுமையாக தாக்கபட்டார், அவரின் நிலை கவலைகிடமாக உள்ளது.

பிரிட்டிஷ்…இல் பிறந்த நடிகை எமி ஜாக்சன் தனது 17 வது வயதில் மாடலிங் துறையில் நுழைந்தவர் மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்று பல படங்களில் நடித்தவர் மதராசி பட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜார்ஜ் பனாயிடோவுடன் லிவிங் Relationship…இல் இருந்தவர் 2019….ஆம் ஆண்டு நிச்சயதார்த்தத்தை அறிவித்த சில மாதங்கள் கழித்து ஆண் குழந்தையை பெற்றவர் திடிரென்று இருவரும் பிரிவதாக அறிவித்தார். நேற்று எமி ஜாக்சன் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்..கை ( Ed Westwick) எளிமையான முறையில் திருமணம் செய்தவர் “The journey has just begun” என்று பதிவிட்டு தங்களது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

கிரேட் பிரிட்டிஷ் கிராமப்புறங்களில் இங்கிலாந்து அரசாங்கத்தின் 4G வெளியீடு வேகத்தை உயர்த்துவதால் கிராமப்புறங்களில் விரைவான மொபைல் கவரேஜைப் பெற, டஜன் கணக்கான UK சுற்றுலா ஹாட்ஸ்பாட்கள் ஏற்படுத்தபடும் என்று UK அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சேவையால் மலை ஏறுபவர்கள் மற்றும் வனவிலங்கு பார்வையாளர்கள் வேகமான, நம்பகமான மொபைல் கவரேஜை…ஜை அனுபவிப்பார்கள். பிரிட்டனில் அதிகம் பார்வையிடப்படும் சில தேசிய பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்த தொலைதூரப் பகுதிகளில் சிக்னல் இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் ஆகிய குறைகள் நிவர்த்தி செய்யபட்டுள்ளது.

கிழக்கு லண்டன் டவர் பிளாக்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கி விடுமுறை தினமான திங்கள்கிழமை அதிகாலை கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக்கில் தீப்பிடித்தது. குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.. வானளவு எழுந்த புகை மூட்டதை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 225 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகிறனர்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் கமலஹாசன் முதலமைச்சருடன் தீடிர் சந்திப்பு ..

திடீரென்று மறைந்த நடிகர் பிஜிலி ரமேஷ்