in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (31.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (31.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

டிக்கெட்டு மறுவிற்பனைக்கு இசைக்குழு தடை.

ஓயாசிஸ் ரசிகர்கள் டிக்கெட்டுகளுக்காக தவிக்கிறார்கள். ஒயாசிஸ் மறுபிரவேசம் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மறுவிற்பனையில் விலை உயர்த்தப்பட்டதை எச்சரித்ததை அடுத்து, UK தேதிகளுக்கான டிக்கெட்டுகளை விற்கும் மூன்று இணையதளங்களான – Ticketmaster, See Tickets மற்றும் Gigsandtours….ரை பயனர்கள் அணுக இசைக்குழு அறிவுறுத்தியது. டப்ளின் க்ரோக் பூங்காவில் ஆகஸ்ட் 2025 நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் அயர்லாந்தில் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில், சில பயனர்கள் Ticketmaster இணையதளத்தை அணுகுவதில் சிக்கல்கள் இருபதாக புகார்அளித்தனர். நேற்று விற்பனை தொடங்கிய மூன்று மணி நேரதிற்குள் StubHub மற்றும் Viagogo போன்ற இணையதளங்களில் 40 மடங்கு அதிகமான விலைக்கு டிக்கெட்டுகள் மறுவிற்பனை செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் இடிந்து விழும் கான்கிரீட் பள்ளிகளுக்கு ‘நிதிப் பாதுகாப்பு’ வேண்டும்

இங்கிலாந்தில் இடிந்து விழும் கான்கிரீட் பள்ளிகளுக்கு ‘நிதிப் பாதுகாப்பு’ வேண்டும் என்றும் இதனால் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என தலைமையாசிரியர்கள் சங்க தலைவர் எச்சரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்., இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பள்ளிகளுக்கு “நிதிப் பாதுகாப்பை” வழங்குமாறும், கற்றலைப் இழந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை பெறுவதற்கு நிதியுதவி வழங்குமாறும் தலைமையாசிரியர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்கிரீட் (ராக்) கொண்ட கட்டிடங்களை மூடுமாறு பள்ளிகளுக்குஅறிவுறுத்தபட்டுள்ளது.

டுல்லி கியர்னி பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுகளில் தனது இரண்டாவது தங்கத்தை வென்றார்

டுல்லி கியர்னி பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுகளில் தனது இரண்டாவது தங்கத்தை வென்றார், அதே நேரத்தில் ஜாகோ வான் காஸ் வெலோட்ரோமில் ஒரு சில நாட்களுக்கு முன்பு கார் மோதிய போதிலும் வெற்றி பெற்றார், ஆண்களுக்கான 3,000 மீட்டர் தனிநபர் பர்சூட் இறுதிப் போட்டியில் சக வீரர் ஃபின் கிரஹாமுக்கு எதிராக வான் காஸ் சைக்கிள் ஓட்டுதல் தங்கத்தை வென்றார். சைக்கிள் ஓட்டுதலில் தங்கத்தை வென்ற முதல் பிரிட்டிஷ் வீரர் என்ற பெருமையை பெற்றார், கிரேட் பிரிட்டன் ஒரே நாளில் நான்கு தங்கங்களை வென்றது.

இங்கிலாந்தில் ‘ஆசிரியர் இல்லாத’ முதல் AI வகுப்பறை லண்டனில் திறக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இங்கிலாந்தின் முதல் AI வகுப்பறையை லண்டனில் உள்ள ஒரு தனியார் பள்ளி திறக்கிறது. AI கற்பித்தல் “ஆன்மா இல்லாத, இருண்ட எதிர்காலத்திற்கு” வழிவகுக்கும் என்று சிலர் விமர்சிகையில், தொழில்நுட்பம் துல்லியமான, கற்றலை மாணவர்களுக்கு அனுமதிக்கிறது என்றும் ஒரு சிலர் கூறுகிறார்கள். டேவிட் கேம் கல்லூரி, லண்டனில் உள்ள ஒரு தனியார் பள்ளி, 20 GCSE மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லா புதிய பாடத்திட்டத்தை செப்டம்பரில் ஆரம்பிக்க உள்ளது.

What do you think?

ஆந்திரா விஜயவாடா இந்திரகீலாத்திரி மலையில் பாறை சரிவு

தலைமை செயலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சட்டமன்றம் கட்ட துணைநிலை ஆளுநர் ஒப்புதல்