பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (03.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News
இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த பிரிட்டன் முடிவு செய்து உள்ளது.
இது “தாமதமான முடிவு” என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லார்ட் பீட்டர் ரிக்கெட்ஸ் கூறுகிறார். இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தியது வெட்கக்கேடானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் நெதன்யாகு கூறியதவது இந்த தடை தனது நாட்டின் “உறுதியை” பாதிக்காது என்று கூறுகிறார். இஸ்ரேலுடன் நிற்பதற்குப் பதிலாக, காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக ஜனநாயகம் பிரிட்டன் என்று கோபம் கொப்பளிக்க கூறினார், இவர்களின் தவறான முடிவு ஹமாஸைத் தைரியப்படுத்தும் என்றார். “பிரிட்டிஷ் ஆயுதங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்ரேல் இந்தப் போரில் வெற்றி பெற்று தமது எதிர்காலத்தைப் பாதுகாக்கும்” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
மாணவர்கள் பகலில் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துமாறு பள்ளிகளுக்கு பிரிட்டின் கல்வி அமைச்சர் அறிக்கை அனுப்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை பால் கிவன் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்கள் உட்பட பள்ளி நாட்களில் மொபைல் போன்களை பார்க்கக்கூடாது, பாடங்களின் போது மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்க மொபைல் போன் தடைகள் உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் தொலைபேசிகளைக் கொண்டு வருவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவது. தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி தொடங்கும் போது தங்கள் தொலைபேசிகளை ஊழியர்களிடம் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டது.
மின்சார கார்களுக்கு ‘பே-பர்-மைல்’ (Payfair Mile) திட்டத்தை விதிக்க அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் வலியுறுத்தினார். வாகன ஓட்டுநர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில், இழந்த எரிபொருள் வரி வருவாயை ஈடுகட்ட கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் அரசுக்கு ஆண்டுக்கு £25bn வருவாய் ஈட்டுகின்றன. எரிபொருள் நிரப்பப்பட்ட கார்களில் இருந்து ZEV களுக்கு அதிகமான ஓட்டுநர்கள் மாறுவதால் ஒரு பங்கை அரசாங்கதுக்கு செலுத்துவது நியாயமானது என்று முன்மொழிந்தார்.
மில்டன் கெய்ன்ஸில் உள்ள பிளெட்ச்லியைச் சேர்ந்த 37 வயதான ஆடம் மெர்ரிமன் மாநகர காவல்துறையின் முன்னாள் கான்ஸ்டபிள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்ட குழந்தையைத் தொட்டு வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் ஒரு குழந்தை வைத்து அநாகரீகமாக படங்களை தயாரித்தல், தவறான படங்களை வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யபட்டார்.