கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்காக தயாராகும் பிரையண்ட் பூங்கா .. பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர் . பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகு ரசித்து தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருவர் . இந்த சூழலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்கா உள்ளது .
இங்கு மே மாதம் சீசனை முன்னிட்டும் வரும் மலர்கண்காட்சியை தொடர்ந்தும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . இந்த மலர் கண்காட்சிக்காக பல லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது . குறிப்பாக சால்வியா, டேலியா , மேரி கோல்ட் , ரோஜா மலர்கள், பிங்க் ஆஸ்டர் , டெல்பினியா, பேன்சி உள்ளிட்ட பல்வேறு மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை மெய்சிலிர்க்க வைத்து வருகிறது .
தரைப்பகுதியில் நிலவும் கடுமையான வெயிலை போக்கும் வகையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த மலர்கள் கண்களுக்கு குளிர்ச்சி அடைய வைத்து வருகிறது . மேலும் வரும் நாட்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது