மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானேர் பல்வேறு வேடமிட்டு நேர்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் புற்று வடிவில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராதிரி மறுநாள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று மயானக்கொள்ளை அங்காள்ம்மன் கோவிலில் நடைபெற்ற தில் தமிழகம், புதுச்சேரி ஆந்திர கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயானக் கொள்ளையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு என்னை,சீக்காய், இளநீர்,பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இன்று அம்மன் மயனாகாளி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாசி பெருவிழா வானது நேற்று தொடங்கி 13 நாட்கள் இக்கோவிலில் நடைபெறுவதால் மாசி தேரோட்டம் வருகின்ற 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மயானக்கொள்ளையில் சில்லரை காசுகள், பழங்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள், நெல், போன்றவகளை படையலிட்டு சாமி மீது வாரி இறைத்து மயானக்கொள்ளையில் பக்தர்கள் ஈடுபட்டனர்.