மாகி முதல் கேரளா மாநிலம் தலச்சேரி வரை புறவழிச்சாலை முதலமைச்சர் ரங்கசாமி காணொளி வாயிலாக பங்கேற்பு
புதுச்சேரி மாகி முதல் கேரளா மாநிலம் தலச்சேரி வரை புறவழிச்சாலை ரூ.1543 கோடி மதிப்பில் ஆறு வழி சாலையாக சுமார் 18.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டு அதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார் இதில் முதலமைச்சர் ரங்கசாமி காணொளி வாயிலாக பங்கேற்றார்
நாடு முழுவதும் ரூ. 1 இலட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு நெடுஞ்சாலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி யூனியன் பிரதேசமான மாகியையும், மாகி பகுதியை ஒட்டியுள்ள கேரள பகுதியான தலச்சேரியையும் இணைக்கின்ற ஆறுவழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த மாகி-தலச்சேரி NH-66 புறவழிச்சாலை ரூ.1543 கோடி மதிப்பில் 18.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச் சாலையாகப் போடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். சட்டப்பேரவைத் தலைவர்
செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், கே எஸ் பி ரமேஷ், நாக தியாகராஜன், அரசுச் செயலர் கேசவன், ஆகியோர் உடனிருந்தனர்.