வேட்பாளர் வைத்தியலிங்கம் அவர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு
2024 புதுச்சேரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்தியலிங்கம் அவர்களை ஆதரித்து ஜவகர் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்...
உழவர்களை சட்டமன்றத் தொகுதி ஜவகர் நகர் வார்டில் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சகாயராஜ் செல்வம் மற்றும் ஜவகர் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலர் நந்தா என்ற நந்தகுமார் இவர்களின் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இதில் மத்திய மாவட்ட துணை தலைவர் தேவன், செயலாளர் தீன தயாளன் மற்றும் மாநில சிறப்பு அழைப்பாளர்கள் கிருஷ்ணன், சீதாராமன், விஜயன், அன்பழகன், சந்திரன், மகிலா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணா தேவி, செயலாளர் அன்பழகன் சரசு, காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் தலைவி சரஸ்வதி தீனா, நிர்வாகிகள் விஸ்வநாதன் , கதிரேசன், கிஷோர் , பிரகாஷ், சுந்தர், சந்துரு, இந்திரா, ஸ்டெல்லா மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பில் ஊர் மக்கள் பலர் திரண்டு உற்சாக வரவேற்பும், ஆதரவும் தெரிவித்தனர்*.