கஞ்சா…வா? மாட்டிய அசல் கோளாறு மற்றும் நண்பர்கள்
அசல் கோளாறு யூடியூப் சேனல் மூலம் கானா பாடலை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் பிக்க் பாஸ் நிகிழ்சியிலும் பங்கேற்று சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
லியோ படத்தில் நான் ரெடி என்ற பாடலை பாடியவர். வெளிநாட்டுகளில் பாப் நிகழ்ச்சியியையும் நடத்தி வருகிறார்.
அசல் கோளாரு நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தது பரபரப்பானது. தனது மலேசிய நண்பர்களை குடியுரிமை அதிகாரிகள் மோசமாக நடத்தியதாகவும் கஞ்சா வைத்திருகின்ராயா என்று மிரட்டியதாகவும் அசல் கூறியுள்ளார்.
மலேசியா சிட்டிசன் ஆன எனது நண்பர் இரண்டு மாதமாக சென்னையில் என்னுடன் தங்கி இருக்கிறார் விசா Expire…ஆனதால் அவரது நாட்டில் Renewal பண்ணியிருக்கிறார்.
ஆனால் எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது என்ற தகவல் எங்களுக்கு நேற்று தான் தெரியும். நாங்கள் குடியுரிமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் இது சம்பந்தமாக பேசிய பொழுது எனது நண்பரை தனியாக அழைத்துச் சென்று அவரை அடித்து துன்புறுத்தி கஞ்சா வைத்திருகிறாயா என்று கேட்டிருக்கின்றனர்.
மத்திய அரசு அதிகாரிகள் ஏன் இப்படி நடக்கின்றனர் என்று தெரியவில்லை தமிழ்நாடு போலீஸ் தான் எங்களுக்கு உதவி செய்தனர்.
கானா பாடல்களை பாடுபவர்களை பார்த்தாலே கஞ்சா என்ற வார்த்தை ஏன் ஞாபகதிற்கு வருகிறது என்று தெரியவில்லை என்று கேள்வி கேட்டிருக்கிறார்.