in

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம், குருபூஜை தினமாக அறிவிப்பு


Watch – YouTube Click

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம், குருபூஜை தினமாக அறிவிப்பு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தாலும் மக்கள் அவர் மீது வைத்திருந்த மரியாதையும் அன்பும் குறையாமல் இன்றும் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளை “குரு பூஜை நாளாக” திமுக அறிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று அதிகாலை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சியினருடன் நடைபெற்ற அமைதி ஊர்வலம் தே.மு.தி.க., அலுவலகத்தில் நிறைவடைந்தது.

முன்னணி நடிகர்கள் முதல் மாடித் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் சமமான உணவை முறையை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தியவர் Captain அவர்கள்.

அவர் இறந்த பிறகும், அவரது நினைவிடத்தில் விஜயகாந்த் அன்னதான அறக்கட்டளை மூலம் தினமும் உணவு வழங்கும் மரபு தொடர்கிறது. கடந்த ஆண்டில், ஏறத்தாழ 2.5 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.

அவர் மறைந்தாலும் அவரது பணி முலம் மக்கள் மனத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரது சேவையை பாராட்டும் விதமாக தற்பொழுது வரும் படங்களில் அவருடைய பாடல்களையும் உருவத்தையும் இணைத்து அவரை கௌரவப்படுத்தி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் வெளியான படைத்தலைவன் படத்தின் டிரைலரிலும் விஜயகாந்த் வருவது போல் காட்சி அமைக்கப்பட்டது . கேப்டன் உங்கள் சொத்து அவரை நீங்கள் சினிமாவில் பயன்படுத்த எங்களிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்று பிரேமலதா அவர்கள் கூறியுள்ளார்.

“வாழ்ந்தாலும் இறந்தாலும் மக்கள் சொல்ல வேண்டும், அவரைப் போல் யார் என்று? என்ற அவரது பொன்மொழியில், சமத்துவம், இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றின் கொள்கைகள் மில்லியன் கணக்கானவர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, தனது கொள்கைகளால் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் Captain…னை சிரம் சிரம் தாழ்த்தி வணங்குவோம். நாம் அவரை மறக்கும் வரை அவருக்கு மரணம் என்றும் இல்லை.


Watch – YouTube Click

What do you think?

ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை யொட்டி அலகு குத்தி தேர் இழுத்து வந்த ஐயப்ப பக்தர்

நூற்றுக்கணக்கான மீனவர்கள் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு திலகம் இட்டு மலர் தூவி மௌன அஞ்சலி