சென்னையில் இருந்து பழனிக்கு சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சம்பவ இடத்திலேயே 2 பலி
சென்னையிலிருந்து பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக ஐந்து பேர் கொண்ட நபர்கள் ஒரு காரில் பயணம் செய்துள்ளனர்
சென்னை டு திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே குறிப்பாக சேப்பாக்கம் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த காரானது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
விபத்தில் காரில் பயணம் செய்த சபரி 36 பிரபாகரன் 35 என்ற இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்
மேலும் காரில் பயணித்த மூன்று நபர்களில் ஓட்டுனருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது
விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு வேப்பூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்