முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பலி – ஒருவர் படுகாயம்
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகா, ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காரல்மார்க்ஸ் (38). தச்சு வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கேசவராஜன் என்பவருடன் சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் தங்கி தச்சு வேலை செய்து வந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்வதற்காக இருவரும் புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது நாமக்கல் – திருச்சி சாலையில் தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை கொண்டாம் வாரி பாலம் அருகே வந்த போது பின்னால் வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தச்சு தொழிலாளிகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கார்ல்மார்க்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து காரல்மார்க்ஸ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஹரீஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.