செஞ்சியில் சினிமா பட பாணியில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
செஞ்சியில் சினிமா பட பாணியில் இரண்டு கார்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் நேற்று மாலை திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அப்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
மேலும் அதே திசையில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மீதும் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வேல்முருகன் மற்றும் ஆனந்தராஜ் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் காயம் அடைந்த இருவருக்கும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி செய்த பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செஞ்சி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வரும்நிலையில் இரண்டு கார்கள் மோதிக் கொள்ளும் பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது …