in

“மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி” மாற்று திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு , தஞ்சாவூர் “மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி” சார்பாக மாற்று திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டாரங்கில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன் ஏற்பாட்டில், மத்திய மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது…

நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு விளையாட்டு உபகாரணங்கள், ஒளி எழுப்பும் கை கடிகாரம், பிரைலி எழுதும் உபகரனங்கள், வழங்கப்பட்டன…

செவித்திரன் குறைபாடுடைய மாணவர்களுக்கு கிரிக்கெட் பேட், இறகு பந்து பேட், உள்ளிட்ட விளையாட்டு உபகாரணங்கள் வழங்கப்பட்டது..
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பார்வை குறைபாடுடைய மாணவர்கள், செவிதிறன் குறைபாடுடைய மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவ , மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்…

What do you think?

அய்யம்பேட்டையில் பயங்கரம். மினிபஸ் பேருந்து டிரைவர் வெட்டிக்கொலை

பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி கூலி விவசாயி பலியானார்