in Madurai
7ஆவது நாளாக கையெழுதிட தாமதமாக வந்த டிடிஎப் வாசன் காவல்நிலையத்தில் பரபரப்பு
7ஆவது நாளாக கையெழுதிட தாமதமாக வந்த டிடிஎப் வாசன் காவல்நிலையத்தில் பரபரப்பு
செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் 7ஆவது நாளாக காவல்நிலையத்தில் கையெழுதிட்டார். காவல்நிலையத்திற்கு 20 நிமிடம் தாமதமாக வந்ததால் பரபரப்பு.
கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் வழியில் வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6ஆவது நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டிடிஎப் வாசன் மன்னிப்பு கோரியதால், அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து 10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் 7ஆவது நாளாக மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வருகை தந்து கையெழுத்திட்டார்.
இந்நிலையில் காலை 10 மணிக்கு வருகை தர தாமதமாகி 10.20 மணிக்கு வருகை தந்ததால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து காவல் நிலையத்தில் தாமதத்திற்கான காரணம் குறித்து கையெழுத்து புறப்பட்டு சென்றநிலையில் அப்போது காவல் நிலையத்தின் அருகே இருந்த ஏராளமான ரசிகர்கள் வாசனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.