திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவன் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பிறவி மருந்துதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது கோவிலுக்கு எதிர்ப்புறம் பிரம்மா பிரம்மா தீர்த்தம் அமைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்ததால் அவரது தோஷம் மறைந்ததாகவும் கோயில் உள்ளே அம்பாள் சன்னதிக்கு எதிரே மாங்கல்ய தீர்த்தம் அமைந்துள்ளது
இதில் திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நீராடி அம்பாளை வணங்கின திருமண தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் அஸ்வினி நட்சத்திரத்திற்கான பரிகார ஸ்தலமாக விளங்கும் புகழ் பெற்ற இக்கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த மார்ச் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினத்தோறும் சிறப்பு பூஜைகள் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றது சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா இன்றைய தினம் காலை வெகு விமர்சையாக நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் செயலாளர் சீனிவாசன் துணைத்தலைவர் ஆர் கே சேகர் தமிழக லாரிகள் உரிமையாளர் மாநில சம்மேளன தலைவர் தனராஜ் தமிழக லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் மாநில சம்மேளன முன்னாள் தலைவர் குமாரசாமி திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் திருத்துறைப்பூண்டி திமுக நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் கோயில் செயல் அலுவலர் முருகையன் ஆகியோர் முன்னிலையில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திவாகரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார் சிவவாத்தியங்கள் முழங்க மேலவீதி கீழ வீதி. தெற்குவீதி. வடக்கு வீதி என நான்கு வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு தேர்நிலைக்கு வரும் டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த விடங்கா தியாகேசா என கோசமிட்டு வடம் பிடித்தனர்