கரியாபட்டிணம் சந்தன மாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம்
வேதாரண்யம் தாலுகா கரியாபட்டிணம் சந்தன மாரியம்மன் கோவிலில் ருபாய் 35 லட்சம் செலவில் புதிதாக செய்யபட்ட தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது .
இக் கோவில் சித்திரை மாத திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 35 இலட்சம் ருபாய் செலவில் புதிதாக செய்த தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏரளமான ஆண்கள், பெண்கள் இருபுறங்களிலும் தேரின் வடத்தை பக்தி சிரத்தையுடன் முக்கிய வீதிகள் வழியே மங்கல வாத்தியங்கள் முழங்க இழத்துச் சென்றனர். பின்பு தேர், நிலையை அடைந்தது .நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.