in

ஆடு மேய்க்க லஞ்சம் வாங்கிய சாத்தனூர் பெண் வன காப்பாளர் இடமாற்றம்

ஆடு மேய்க்க லஞ்சம் வாங்கிய சாத்தனூர் பெண் வன காப்பாளர் இடமாற்றம்

 

ஆடு மேய்க்க லஞ்சம் வாங்கிய சாத்தனூர் வனச்சரகத்தில் பணிபுரியும் பெண் வன காப்பாளர் முருகேஸ்வரி இடமாற்றம்.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராதாபுரம் வன காப்புக்காட்டில் ஆடு மேய்க்க திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற விவசாயியிடம் ரூ.5000 பேரம் பேசியதாக பெண் வன காப்பாளர் முருகேஷ்வரி என்பவர் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கிடைக்கப் பெற்றதாக சாத்தனூர் வனச்சரக அலுவலர் ரவி அவர்கள் மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து அவர் ஜமுனாமுத்தூர் நாடானுர் காப்பு காட்டிற்கு அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் வனக்காப்பாளர் வனப்பகுதியில் ஆடு மேய்க்க லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்த விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் வனச்சரக அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

விநாயகர் சன்னதி முன்பாக சாலையோரத்தில் நடந்த திடீர் கல்யாணம்

உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷம்