அனுமதி இல்லாமல் சட்டாம்பிள்ளை தனமாக ஒரு தனியார் போல கேரளா அரசு செயல்படுகிறது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர சிலை முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் 20க்கும் மேற்பட்டோர் “கேரளா அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய ஆணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக அரசு அதற்கு துணை போவதாக கூறி” கேரளா அரசுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை மாநகர் செயலாளர் கதிர்நிலவன் கூறுகையில்.
கேரளா முதல்வர் முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும் அபாயத்தில் உள்ளதாக கூறி அதனை இடித்துவிட்டு கேரளா அரசு தமிழ்நாட்டிற்கு புதிய அணை கட்டி தரும் என குறி இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு 2024 பிப்ரவரி மாதம் விண்ணப்பித்ததை கண்டித்தும், இதுகுறித்து கடந்த மே 28ஆம் தேதி தமிழக முதல்வர் கடிதம் எழுதி தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் கூட்டணியில் உள்ள தமிழ்நாடு முதல்வர் இது பற்றி கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம், சிற்றனையை பகுதியை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கூறியுள்ள நிலையில் பழைய அணையை தகர்த்துவிட்டு புதிய அணை கட்டுவோம் என்பது கேரளா முதல்வரின் ஆணவப்போக்காக உள்ளது.
புதிய அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி என இந்த மூன்று அனுமதியுடன் புதிய அணை கட்டிக்கொள்ளலால் என வலியுறுத்தியும், யாருடைய அனுமதி இல்லாமல் சட்டாம்பிள்ளை தனமாக ஒரு தனியார் போல கேரளா அரசு செயல் படுகிறது. லட்சக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
கேரளா அரசு இடுக்கியில் டேம் கட்டி உள்ளது அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய புதிய அணை கட்டி முல்லைப் பெரியாறு அணை நீரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறதாக குற்றசாட்டினார். இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் இது போன்ற செயலில் ஈடுபடும் அம்மாநிலஅரசுக்கு எதிராக தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.