in ,

சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் தினக்கூலி தொழிலாளர்களாக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்களை இரண்டு குழுவாக பிரித்து நிர்வாகம் மாதத்தின் 15 நாட்கள் மட்டுமே பணி செய்ய வலியுறுத்தி உத்தரவிட்டது. முதல் மாதம் மட்டும் செய்யுங்கள் என்று கூறிவிட்டு இரண்டாவது மாதமும் அதே போன்று பணி செய்ய வலியுறுத்தியதால் அதிர்ச்சி அடைந்த தினக்கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதாக கூறி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை . அதனால் இன்று இரண்டாவது நாளாகவும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் நடப்பாண்டு கரும்பு அரவை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டு அரவை தள்ளி போகும் அபாயம் உள்ளது. மேலும் வெளி ஆட்களை குறைந்த ஊதியத்திற்கு பணி அமர்த்தி, தங்களை ஒதுக்குவதாக கூறி வெளி ஆட்கள் ஆலையின் பணிகளை செய்வதற்கும் தினக்கூலி தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

திண்டிவனத்தில் ஒரே இரவில் இரண்டு பைக்குகள் திருட்டு

மதுரையில் நரிக்குறவ சமூக மக்களின் குலதெய்வ வழிபாடு கோவில் திருவிழா நெய் ரொட்டியில் தலை கைகளை வைத்து நூதன வழிபாடு