in

கோடை வெயிலால் இறந்த கோழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அடக்கம்


Watch – YouTube Click

கோடை வெயிலால் இறந்த கோழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அடக்கம்

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த
தினேஷ் (35) இவர் அதே கிராமத்தில் கடந்த 10ஆண்டுக்கு மேலாக கோழிபண்ணை
நடத்தி வருகின்றார்.

மேலும் தற்போது கோடை வெய்யிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகின்றன.

தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் வெய்யிலின் தாக்கம்
அதிகளவில் உள்ளன. வேலூரிலிருந்து புதுப்பாளையத்திற்கு 15கிலோ மீட்டர்
தூரம் வரை உள்ளதால் புதுப்பாளையம் கிராமத்தில் சில தினங்களாக வெய்யிலின்
தாக்கம் அதிகரித்து வருகின்றன.

இதனால் கோழிப் பண்ணையில் வெய்யில் தாக்கம் தாங்க முடியாமல் 70ஆயிரம்
ரூபாய் மதிப்பீலான சுமார் 350 கோழிகள் திடிரென இறந்து விட்டன.

இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர் திணேஷ் பண்ணை அருகில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கோழிகளை அடக்கம் செய்தார்.

தொடர்ந்து வெய்யில் தாக்கம் உள்ளதால் மேலும் கோழிகள் இறக்க நேரிடுவதாகவும் இதனால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரை திடீரென தாக்கிய மதுப்பிரியர்

முன்னாள் அதிமுக செயலாளர் மகன் மரணத்தில் 5 பேர் கைது – பரபரப்பு வாக்குமூலம்