சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நூறாவது ஆண்டை அடையும் நிலையில் 100 கோடி ரூபாய் நிதி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நூறாவது ஆண்டை அடையும் நிலையில் முன்னாள் மாணவர்கள் 100 கோடி ரூபாய் நிதி அண்ணாமலை பல்கலைக்கழகம் வளர்ச்சிக்காக கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு கன்னடா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்க்கும் முன்னாள் மாணவர்கள் இருந்து ஏராளமான வந்திருந்தனர்.
மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்காக முதல் நிதியாக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக் 5 லட்சம் அமெரிக்க வாழ் அய்யாதுரை குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாயும் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
இந்த வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் நூற்றாண்டை அடைய நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நிதி திரட்டி 100 கோடி ரூபாய் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.