in

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் மாற்றும் விவகாரம்

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் மாற்றும் விவகாரம்

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் மாற்றும் விவகாரம். எவ்வித மாற்றமும் இன்றி புதிய கொடிமரம் அமைக்க தீட்சிதர்கள் வலியுறுத்தல்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடராஜப் பெருமாள் கோவிலில் உள்ளே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் எவ்வித உற்சவம் நடைபெறாமல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கொடிமரம் மற்றும் பணி இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நேற்று துவங்கியது.

நேற்று மாலை அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்ற போது அங்கு கூடிய நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கொடி மரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் கலைந்து போக செய்தனர். இந்நிலையில் இன்று காலை கொடி மரத்தை மாற்றுவதற்காக கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் சந்திரன் தலைமையிலான குழுவினர் கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

அதே நேரம் தீட்சிதர்களும் அப்பகுதியில் கூடி கொடிமரம் மற்றும் பணியை துவங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொடிமரத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கொடிமரத்தை மாற்ற தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தனர்.தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் நகர போலீசார் தீசேதர்கள் மற்றும் பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில் கோவில் கொடிமரத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே போல் புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பொது தீட்சிதர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி எழுத்து பூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மீண்டும் இருதரப்பினரிடையே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சிதம்பரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What do you think?

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Legal நோட்டீஸ் அனுப்பி ….நாக சைதன்னியா..விற்கு செக் வைத்த சமந்தா…