முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகர திமுக மற்றும் நகர இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கம் மற்றும் எல்லோருக்கும் எல்லாம் என்னும் திராவிட மாடல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 71 ஆம் ஆண்டு பிறந்த தின விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட் அருகே நடைபெற்றது.
கூட்த்திற்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ. கணேசன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பாக அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மகளிருக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார்.
அதில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து,மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்படி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழகம் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார் என்றும
மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையானது திட்டமாக்கப்பட்டுள்ளது இதனை இனி யார் வந்தாலும் செய்தே ஆக வேண்டும் யாராலும் இதை நிறுத்திட முடியாது என்பதற்கு சான்றாக 5000 -க்கும் மேற்பட்ட மகளிர் இங்கே கூடியிருக்கிறீர்கள் எனவும்.
மத்தியில் ஆளுகிற பிஜேபி அரசு நம்மிடம் இருந்து வாங்கும் ஜிஎஸ்டி வரி நூறு ரூபாய் என்றால் நமக்கு வருவது 26 ரூபாய் தான் ஆனால் மற்ற வட மாநிலங்களுக்கு 100 ரூபாய் ஜிஎஸ்டி வரியை வாங்கிக் கொண்டு அதிகப்படியான நிதியை மத்திய அரசு தருகிறது. ஆனால் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது மத்திய பிஜேபி மோடி அரசு எனவும்
அனைத்து விலை ஏற்றத்திற்கும் காரணம் மத்திய அரசு தான் இதில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை ஆகியவற்றை உயர்த்தியது மத்திய அரசுதான் எனவும்
சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளுக்கு பேரிடர் இழப்பு நிதி எதையும் மத்திய அரசு தரவில்லை ஆனால் மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் ஆய்வு செய்வதற்கு மத்திய பாஜக அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது எனவும் வருகின்ற.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் தி.மு.க மற்றும் இந்திய கூட்டணி வெல்ல அனைவரும் பாடுபட வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ராமு நன்றி கூறினார்.