in

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் மலட்டாற்றின் குறுக்கே புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் மலட்டாற்றின் குறுக்கே புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை முதலமைச்சர் ரங்கசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலட்டாற்றின் குறுக்கே உள்ள இரு வழிச்சாலை பாலத்தை நான்கு வழிச்சாலை பாலமாக அகலப்படுத்தும் பணி ரூ. 535.55 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இப்பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு புதிய பாலத்தைத் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சபாநாயகர் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய பாலம் ஆற்றின் மேற்குப்பகுதியில் 54 மீட்டர் நீளம் x 12 மீட்டர் அகலத்திற்கு உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்த்து சாலைப்பாதுகாப்பை உறுதி செய்வதுடன் வாகன நெரிசலை குறைப்பதற்காக புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

What do you think?

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வைத்திருந்த பேனரை அகற்ற கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணியின் 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.