in

முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்


Watch – YouTube Click

முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்

 

புதுச்சேரி நெல்லுமண்டி விநாயகர் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

புதுச்சேரி நெல்லுமண்டி விநாயகர் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக கடந்த 27ஆம் தேதி மங்கல இசை மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடர்ந்து வரசித்தி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

யாகசாலை பூஜையில் வர சித்தி விநாயகருக்கு கணபதி பூஜை ரக்ஷாபந்தனம் நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்று நான்கு கால யாக சாலை பூஜை நிறைவடைந்து யாத்திரா தானம் கலச புறப்பாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் வர சித்தி விநாயகர் மூலவர், விமானம் ஆகியவற்றிற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா அபிஷேகமும் மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரசித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் வியாபாரிகள் செய்திருந்தனர். மேலும் இன்று முதல் 47-நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் அரசு

75 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற உலக சாதனை