தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு
பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி வில்லியனூர் தொகுதியில் பிரச்சார மேற்கொண்டார்.
அவருக்கு பாஜக நிர்வாகி முகமது யூனூஸ் தலைமையில் சுல்தான்பேட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது
பின்னர் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…
கல்விக்கடன் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் சிறுபான்மையினர் மக்களுக்கு புதுச்சேரி அரசு கொடுத்து வருகிறது,கடந்தாட்சியால் புதுச்சேரியில் ஒரு சாலைகளை கூட போட முடியவில்லை இது எல்லாம் நீங்கள் உணர வேண்டும் என்று குறிப்பிட்ட ரங்கசாமி, கடத்த ஐந்தாண்டு காலம் எம்பியாக இருந்த வைத்திலிங்கதால் எந்த ஒரு திட்டங்களும் மாநிலத்தில் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான் ரேஷன் கடைகள் மூடப்பட்டது ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ரேஷன் கடைகளை திறப்போம் என்று வைத்திலிங்கம் பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்
இன்னும் இரண்டு ஆண்டுகள் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் இருக்கப்போகிறது மத்தியிலும் இந்த ஆட்சி தான் அமையப் போகிறது இவர்கள் எப்படி ரேஷன் கடை திறக்க முடியும் எப்படி என்று கேள்வி எழுப்பி ரங்கசாமி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம் ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அந்தஸ்து பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவிக்கும் நாராயணசாமி புதுச்சேரியில் கடந்த காலங்களில் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தார்கள் அப்போது மாநில அந்தஸ்து வாங்க வேண்டியது தானே என்றார்.
இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெற உள்ளது அப்போதும் நாம் வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்ட ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைத்தியலிங்கம் எத்தனை முறை பேசி இருப்பார் என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்பியாக இருந்த வைத்திலிங்கத்தால் எதையும் செய்ய முடியவில்லை எதுவும் செய்யப்போவதில்லை இனிமேல் அவர் தேர்ந்தெடுத்தால் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ரங்கசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.