தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் தான் பணக்கார குடும்பம்
தமிழ்நாட்டில் திமுகவை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் குடும்பம் தான் பணக்கார குடும்பம் என விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
அதிமுகவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உலகத்திற்கே அறிவிக்கப்பட்டது பிஜேபி கட்சியோடு எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணி இல்லை இப்போதும் இல்லை எப்போதும் இல்லை பிஜேபி கட்சியோடு எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என தெரிவித்தார்.
ஓபிஎஸ் விரக்தியின் உச்சநிலையில் இருக்கிறார் அவர் பேசுவது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது பிஜேபினுடைய கொத்தடிமையாக இருந்து வருகிறார்.
ஓ.பி.எஸ். அதிமுக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எழுச்சியோடு இருப்பதாகவும் அதனை ஓபிஎஸ் ஜீரணிக்க முடியாமல் இருந்து வருகிறார் ஏதோ ஒரு நாளை இந்த நபர்களை வைத்து கூட்டம் இருக்கிறது என பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.
இவரது காரியம் ஒருபோதும் நடக்காது என தெரிவித்தார் அதிமுக சின்னத்தை பிரளயமே வந்தாலும் இரட்டை இலை சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது தமிழக முதல்வர் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று வந்து 3000 கோடி 4000 கோடி என ஒப்பந்தம் போட்டு வந்ததாக சொல்கிறார்கள்.
ஆனால் இவர் ஒப்பந்தம் போட்டுள்ளாரா ஸ்பெயின் நாட்டினை சேர்ந்தவர்கள் ஒப்பந்தம் போட்டனரா என தெரியவில்லை அதெல்லாம் தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
ஓபிஎஸ் பேச்சை கேட்பதற்கு அங்கு ஆளே இல்லை கூலிக்கு ஆள் பிடித்து வைத்து கொக்கார வைத்தால் எந்த கூட்டத்திலும் யாரும் உட்கார மாட்டார்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார் அதனை தொண்டர்கள் நம்ப தயாராக இல்லை விடியாத அரசு திமுக அரசு.
தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித் இருக்கிறது இந்த அரசு என குற்றம் சாட்டினார் அதிமுக எழுச்சியின் மூலம் இம்முறை மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தட்டேந்தும் நிலையும் மடிப்பிச்சை என்றும் நிலையும் தான் இந்த விடியோ அதிமுக அரசு உருவாக்கி இருக்கிறது எனவும் இந்த அரசால் யாருக்குமே விடியவில்லை எனவும் இந்த ஒரு குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் விடியவில்லை எனவும் தமிழ்நாட்டில் இந்த குடும்பம் தான் பணக்கார குடும்பம் எனவும் அவர் தெரிவித்தார்.