in

இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுரை

இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுரை

 

புதுச்சேரி..படித்தால் முன்னேறலாம்..விரைவாக படித்தால் நன்றாக முன்னேறலாம்..இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுரை..

பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமியை காமராஜ் படத்தில் வரும்
“நாடு பார்த்ததுண்டா” பாடல் இசைக்க மாணவிகள் பரதநாட்டியம் ஆடியபடியே விழா மேடை வரை அழைத்து வந்தனர்.

வழியில் குழந்தைகளும் பொது மக்களும் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல் முதல் அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

(குறிப்பு முதல் அமைச்சரை திரைப்பட பாணியில் அழைத்து வரும் காட்சிகள் உள்ளன)

தொடர்ந்து மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றிய ரங்கசாமி, ஏழை எளிய மாணவர்கள் நன்றாக படிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 38 கோடி ரூபாய் ஒதுக்கி விளையாட்டுக்கு தனி துறை வழங்கப்பட்டு அனைத்து வசதிகளை அரசு செய்து தரும் என்றார்.

படித்தால் முன்னேறலாம்..விரைவாக படித்தால் நன்றாக முன்னேறலாம் என்றார்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம்‌ மற்றும் , சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில், அரியாங்குப்பம் இமாகுலேட் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் 142 மாணவ மாணவிகள் மற்றும் முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் 40 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 182 மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.

What do you think?

ஜெயபுரம் அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா வசந்த உற்சவ திருவிழா

நெல்லை ஆரெம்கேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா பாரம்பரிய கைத்தறி பொருட்கள் கண்காட்சி