குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் இட ஒதுக்கீடு… சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…
புதுச்சேரியில் பிறப்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு (OBC)-11%
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC)-18%
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம் (BCM)-2%
மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு (EBC)-2%,பிற்படுத்தப்பட்ட (BT)வகுப்பினருக்கு0.5% என மொத்தம் 33.5% இட ஒதுக்கீடு கடந்த சட்டப்பேரவையில் செய்யப்பட்டது…
இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அனுமதி மறுத்தது அதன் பிறகு புதுச்சேரி அரசு ரத்து செய்து அதற்கான அரசனையும் வெளியிட்டது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி
மீண்டும் உள் இட ஒதுக்கீடு அளித்து அறிவிப்பை வெளியிட்டார்..
அப்போது அவர்,புதுச்சேரி அரசுத் துறைகளில் குரு பி அரசிதழ் பதிவு பெறாத பதவிகளில் MBC,EBC,BCM மற்றும் BT வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் படி பிறப்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு (OBC)-11%
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC)-18%
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம் (BCM)-2%
மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு (EBC)-2%,பிற்படுத்தப்பட்ட
(BT) வகுப்பினருக்கு 0.5% என மொத்தம் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது..